Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு; விஜய் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது!' – ஓபிஎஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2025
in அரசியல் செய்திகள்
0
`மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு; விஜய் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது!' – ஓபிஎஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குரு பூஜையில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓ பன்னீர் செல்வம் மருது பாண்டியர் சிலைக்கு வெள்ளி கவசம் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் பன்னீர்செல்வம். அதிமுகவுடனான போராட்டம் பற்றி பேசியவர், “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய நோக்கமே, இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய போது, கழகம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கழகத்தினுடைய சட்டவிதி தான் நடக்க வேண்டும் என்று சட்டவிதிகளை உருவாக்கினார்கள். பல்வேறு சட்டவிதிகள் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கினார்கள்.

Edappadi Palanisamy

கழகத்தினுடைய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கின்ற உரிமை கழகத்தினுடைய தொண்டர்களுக்குதான் இருக்க வேண்டும். கழகத்தினுடைய தொண்டர்கள் தேர்தல் மூலமாக பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் கழகத்தினுடைய சட்டவிதி. அந்த சட்டவிதியை புரட்சி தலைவருடைய உயிலில் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு நிலைமை என்ன? கழகத்தினுடைய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கு 10 மாவட்ட கழகத்தினுடைய செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட கழக செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். ஐந்து வருடம் அவர் தலைமை கழகத்தினுடைய நிர்வாகியாக இருக்க வேண்டும் என்று உருமாற்றி இருக்கிறார்கள்.

கழகத்தினுடைய இந்த சட்டவிதியை உருவாக்குவதற்கு காரணம், புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து விளக்குவதற்கு திமுகவுடைய சில நூறு பொதுக்குழு உறுப்பினர்கள் தான் காரணம் என்ற நிலை இருந்தது. எதிர்காலத்தில் அனைத்து இந்திய அண்ணா முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித்தலைவர் உருவாக்கியபோது, அவருக்கு ஏற்பட்ட நிலை பின் வருங்காலத்தில் எந்த தலைவருக்கும் இருக்கக்கூடாது, பொதுச்செயலாளர் அவர்களை தொண்டர்கள் தான் தேர்தல் தேர்தல் முறையாக தேர்வு செய்யப்படும் என்று அந்த விதியை உருவாக்கினார்கள்.

எம்.ஜி.ஆர்

மற்ற விதிகளெல்லாம் காலத்துக்கு தகுந்த மாதிரி திருத்தம் செய்யவோ அல்லது ரத்து செய்ய உரிமை உண்டு. ஆனால் இந்த ஒரு விதியை மட்டும் எந்த காலத்திலும் யாராலும் அது பொதுக்குழுவாக இருந்தாலும் சரி, மாவட்ட கழக செயலாளராக இருந்தாலும் சரி, திருத்தம் செய்யவோ ரத்து செய்யவோ கூடாது என்று எம்ஜிஆர் அவர்கள் தேர்தல் விதியை உருவாக்கி இருக்கிறார்கள்.

புரட்சித்தலைவருடைய இந்த எண்ணம், செயல்பாட்டுக்காக நாங்கள் இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தினுடைய வழிகாட்டுதல் என்னவென்றால், மீண்டும் இந்த ஆறு வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய சிவில் சூட்டில் விசாரிக்கப்பட வேண்டும். அங்கு வழங்கப்படுகின்ற தீர்ப்புதான் இறுதியானது. இதற்கு முன்னாள் எந்த தீர்ப்பு இந்த பிரச்சனை குறித்து வழங்கப்பட்டிருந்தாலும் அது செல்லாது என்றுதான் உச்சநீதிமன்றம் வழிகாட்டி இருக்கிறது. அதன்படிதான் இன்றைக்கு இந்த சிவில் சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த சிவில் சுற்றில் எங்களுடைய நியாயத்தை புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய ஒரு சொல்லப்பட்ட நியாயத்திற்காக நாங்கள் இன்றைக்கு சட்ட போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

விஜய்

விஜய் உடன் கூட்டணி இருக்குமா எனக் கேட்கப்பட்டபோது, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து கரூரில் பாதிக்கப்பட்டோருக்கு விஜய் ஆறுதல் கூற அவர்களை மாமல்லபுரத்துக்கு வரவைத்திருப்பது குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, “அந்த துயர சம்பவம் நடைபெற்று விட்டது. அங்கு சென்று ஆறுதல் சொன்னாலும் சரி, இங்கு கூட்டி வந்து சொன்னாலும் சரி. அனுதாபம் தெரிவித்ததைத்தான் நாம் பாராட்ட வேண்டுமே ஒழிய, அதற்கு உள்ளே நுழைந்து சில காரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பது சரியாக இருக்காது. இப்போது செய்திருப்பதே உண்மையிலேயே பாராட்டக்கூடியது.” என்றார்.

‘விஜய் – அதிமுக கூட்டணி அமையாமல், அடுத்தமுறை திமுக ஆட்சிக்கு வந்தால் தவெக என்ற கட்சியே இருக்காது’ என்ற அதிமுகவைச் சேர்ந்த உதயகுமார் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “நீங்க கடந்த காலங்களை அப்படியே புரட்டி பாத்தீங்கன்னா உதயகுமாருக்கு நான் எந்த காலத்திலும் பதில் சொல்லல. இந்த கட்சியை (அதிமுக) இந்த நிலைமைக்கு கொண்டு போய் சேர்த்ததுக்கு முக்கிய காரணம் அவருடைய சுயநலம் தான்” எனப் பதிலளித்தார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற கேள்விக்கு, “அதற்கான வாய்ப்பு இருப்பது கண்கூடாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதனால் திமுகவுக்கு வாய்ப்பு இருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். நான் சொல்லவில்லை” என சிரித்தபடி பதிலளித்தார்.

“ஓ.பி.எஸ் வந்துகொண்டிருக்கிறார்..!” – கூட்டணி குறித்து திமுக அமைச்சர் பேச்சு!



.

Previous Post

ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களுடன் தொடர்பு.. நான்கு குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்! | இந்தியா

Next Post

தமிழகத்தில் நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடக்கம் – தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Bihar Elections 2025 Date: பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு… 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது! | இந்தியா

தமிழகத்தில் நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடக்கம் - தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In