Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கும்பமேளா விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 3, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கும்பமேளா விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகா கும்பமேளா விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளி நடப்பு செய்தனர்.

மகா கும்பமேளா நெரிசலில் பலி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். திமுக, காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் இன்றைய அவை நடவடிக்கைக்கு 267 விதியின் கீழ் 9 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மகா கும்பமேளா விவகாரம் உள்பட மனுக்களில் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் குறித்து இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே அவை நடவடிக்கை!

ஆனால், மகா கும்பமேளா விவகாரத்தை உடனே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜவாதி, ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதேபோல், மகா கும்பமேளா விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மக்களவையில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வரும் நிலையில் அவை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.



.

Previous Post

’முருக பக்தர்களை ஒடுக்க மதுரையில் 144 தடை உத்தரவா?’ திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்!

Next Post

“பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 56.33%” -தெலங்கானாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை.. | Telangana Congress government completed the caste census

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 56.33%” -தெலங்கானாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை.. | Telangana Congress government completed the caste census

``பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 56.33%'' -தெலங்கானாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை.. | Telangana Congress government completed the caste census

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In