மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “ பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று தாக்குதல் நடத்தியது, ‘ஆபரேஷன் சிந்தூர்” என்று அழைக்கப்படும் இத்தாக்குதல் மூலம் 9 தீவிரவாத தளங்களை இலக்குகளாக கொண்டு அழிக்கப்பட்டிருக்கின்றன.
காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நமது இந்தியா இராணுவம் திட்டமிட்டு மின்னல் வேகத்தில் சென்று பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்து இருக்கிறது.
இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிற பயங்கரவாதிகளுக்கு இந்திய அரசு பாடம் புகட்டி உள்ளது, வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.
