கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், மாவத்தூர் ஊராட்சி கோடங்கிபட்டியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்தார்.
உடன், கடவூர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் மலையாண்டி, ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கீதா, சிவம் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் A.T. பழனிச்சாமி, செந்தில்குமார், காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் ரத்தினம், ஊர்பட்டக்காரர் அண்ணன் தம்மா நாயக்கர், கரூர்,திருச்சி,திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்து சிறப்பித்த மரியாதைக்குரிய மந்தை நாயக்கர்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சதீஷ், அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


