நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை வீதிகள் அமலுக்கு வந்தன இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள S.V.பாளையம் மணிமுத்தாறு ஆற்றுபாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது S.V.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மகன் குணா என்பவர் டாட்டா ஏசி வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி ஒரு டன் ரேஷன் அரிசி எடுத்துவரப்பட்டதாள் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஐயப்பன் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட குடிமை பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வு துறை காவல் துறையினரிடம் ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை சங்கராபுரம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்

