நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ரயில்வே சட்டத் திருத்த மசோதா குறித்து நேற்று (டிசம்பர் 4) விவாதிக்கப்பட்டது.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் எம்.பி ஜி.செல்வம், “ஏழை எளிய மக்களுக்கு உதவுவதோடு, இந்திய போக்குவரத்துத் துறையின் முதுகெலும்பாக இருக்கும் ரயில்வே துறையை இந்தச் சட்டம் சீரழிப்பதாகவே நான் கருதுகிறேன்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வைப் பகுப்பாய்வு செய்யும்போது, 2017ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை, 292 விபத்துகள் நடந்திருக்கின்றன. அதில் ஏறக்குறைய 220 விபத்துகள் ரயில் தடம் புரண்டதால் நடந்துள்ளன என்று தெரிகிறது.
