ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்பு துறை அலுவலகம் எதிரில் குடிநீர் குழாய் உடைந்து மூன்று நாட்களாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிக்கும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிக்கும் தகவல் கொடுத்தும் சரி செய்யப்படாமல் இருக்கிறது. நாட்டில் எத்தனையோ கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் இது போன்ற மெத்தனப் போக்கில் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்..
தற்போது இருக்கும் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு முன்பு இன்னொரு புதிய தீயணைப்பு துறை ஸ்டேஷன் கட்டப்பட்டுள்ளது. சிலநாட்களில் திறக்கப்படவுள்ள இந்த புதிய தீயணைப்பு ஸ்டேஷன் முன்னால் இது போன்று தண்ணீர் வீணாக செல்வது அவ்விடத்தை எப்போதும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. தீயணைப்பு அதிகாரிகளே புகார் கொடுத்தும் நகராட்சி அதிகாரிகள் கவனிப்பது இல்லை என்று அங்கு கூறப்படுகிறது.

