Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்; அக்டோபர் நடைபெறும் என தகவல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 22, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்; அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப் பணி: அக்டோபர் மாதம் நடைபெறும் என அதிகாரிகள் தகவல்
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், பசுமை வழிச் சாலைபகுதியில் அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு, 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம்-சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.

இவற்றில் 3-வது வழித்தடமான மாதவரம்- சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் 28 சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் 1.2 கி.மீ. தொலைவுக்கான சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கியது.

70 அடி ஆழத்தில்.. இதில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவேரி’ டிபி சாலைக்கு கீழே சுரங்கப் பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகேஅடையாறு ஆற்றைக் கடந்து,அடையாறு சந்திப்பு நிலையத்துக்குச் சென்றடைய உள்ளது. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் இதுவரை 185 மீட்டர் வரை சுரங்கப் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இங்குபயன்படுத்தப்படும் 2-வது இயந்திரம் மூலமாக 80 மீட்டர் வரைசுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேகம் குறைத்து இயக்கப்படும்: இதுகுறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “3-வது வழித்தடத்தில் பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கம் தோண்டும் 2 இயந்திரங்கள், அடுத்த மாத இறுதியில் அடையாறு ஆற்றை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அடையாறு ஆற்றில் 70அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 400 மீட்டர் நீளம் கொண்ட அடையாறு ஆற்றில் சுரங்க தோண்டும் இயந்திரத்தின் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்படும்” என்றனர்.

.

Tags: அகடபரஅடயறஅதகரகளஆறறனஇரணடமஎனகடடகழசரஙகபதகவலதடடம.நடபறமபணமடரமதமரயல
Previous Post

தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் புதிய தர நிர்ணய ஆய்வகம் திறப்பு

Next Post

தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In