திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஏனாதி மேல் பக்கம் ஊராட்சி, ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் கனமழையால் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் கழிவுநீர் மாவட்ட ஆட்சியரின் மழை பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த வாட்ஸ் அப் குழுவிற்கும் புகார் அளித்தும் ஆறு நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் இப்பகுதியில் குழந்தைகள், முதியவர்கள், கர்பிணி பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
கொசு அதிகரிப்பால் வைரஸ் காய்ச்சல் வந்துவிடுமோ என மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்றவேண்டும். அங்குள்ள குடியிருப்பு வாசிகள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு இம்மக்களை புறக்கணிகிறாரா என்று மக்கள் குமுறுகின்றனர்.

