கூடுதலாக விசாரித்த பிறகே தெரிந்தது, தற்போது கட்டண கழிப்பறை எனப் பலகை வைத்து பணம் வசூலிப்பது பொது கழிப்பறை என. மேலும் கடந்த சில மாதங்களாகவே இவ்வாறு தான் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்தது.
பொது கழிவறையைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தோம். அதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் நம்மைத் தொடர்பு கொண்டு பேசியிருந்தனர்.
இது குறித்து, விகடன் இணையதளத்தில்`செஞ்சி: `காசிருந்தா கழிவறையைப் பயன்படுத்துங்க..” – பொது கழிவறையில் கட்டண `அடாவடி!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
விகடன் செய்தி எதிரொலியாக, பொது கழிவறையில் நடைபெற்று வந்த கட்டண வசூலுக்கு முடிவுகட்டப்பட்டிருக்கிறது. `இலவச கழிவறை’ என்று குறிப்பிடப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
