Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிவகங்கையில் எருமைகளை பலியிட்டு ரத்தம் குடித்து வழிபடும் நூதன திருவிழா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 24, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சிவகங்கையில் எருமைகளை பலியிட்டு ரத்தம் குடித்து வழிபடும் நூதன  திருவிழா!
53
SHARES
85
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிவகங்கை: சிவகங்கையில் காளி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிவகங்கையில் உள்ள பையூர் பழமலைநகரில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விரதமிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஆக.22) கோயில் திருவிழா பெருமாள்சாமி பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் நிகழ்வு சனிக்கிழமை அதிகாலை தொடங்கியது.

காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல் எருமை மாடு தலையசைத்து சம்மதம் தெரிவிக்கும் வரை காத்திருந்து அதை பலியிட்ட பின் அடுத்தடுத்த மாடுகள் பலியிடப்படுகின்றன. எருமை பலியிடும்போது வெளியேறும் ரத்தத்தை பக்தர்கள் குடித்து வழிபாடு நடத்தினர்.

சிவகங்கை பழமலை நகர் காளி, மதுரைவீரன் கோயிலில் நடைபெற்ற எருமை பலியிட்டு வழிபடும் நிகழ்வில் மாடு தலையசைத்து சம்மதம் தெரிவிப்பதற்காக காத்திருக்கும் பக்தர்கள்.

காளிக்கு எருமையையும் பிற தெய்வங்களை வழிபடுபவர்கள் ஆடுகளையும் பலியிட்டனர். இந்த நிகழ்வில் 17 எருமை மாடுகளும், 92 ஆடுகளும் பலியிடப்பட்டன.

இந்த விழா கடந்த 25 தலைமுறைக்கும் மேலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு தலைக்கட்டுக்கும்(ஒரே குடும்பத்திலிருந்து வரும் வழித்தோன்றல்) குடில் அமைத்து அதில் வழிபாடு செய்து ஒரு எருமை மாட்டை பலியிடுகின்றனர். அதன் மாமிசத்தை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் தற்போது எந்த ஊரில் வசிக்கிறார்களோ அவர்களுக்கு கொடுத்தனுப்புகின்றனர்.

இந்த விழா அனைவராலும் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் சில ஆண்டுகள் தொடர்ச்சியாகவும், சில ஆண்டுகள் இடைவெளி விட்டும் நடத்தப்படுகிறது.

காளி அசுரனை(எருமை) வதம் செய்யும்போது தரையில் சிந்தும் ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்தெழும் எனவும் அதனால் அதை தரை சிந்தவிடாமல் குடித்து விடுவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை மது எடுப்புடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
.

Previous Post

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : கருவறைக்குள் பாகுபாடு கூடாது : முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

Next Post

ரிஷிவந்தியத்தில் “மக்களுடன் முதல்வர்” முகாம்.. அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரிஷிவந்தியத்தில் “மக்களுடன் முதல்வர்” முகாம்.. அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில்..

ரிஷிவந்தியத்தில் "மக்களுடன் முதல்வர்" முகாம்.. அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இது அம்மக்களின் மத வழிபாடு எனவே இதில் கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In