சட்டமீறல்களும் 13வது ஆவணமும்
மேலும், “அடையாள ஆவணங்கள் குறித்த 13வது விதி குறித்து அவர் அதிர்ச்சி தெரிவித்தார். பீகாரில் நடந்த SIR-க்கு பிறகு வெளியிடப்பட்ட 1/7/2025 தேதியிட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், அதை ஒரு அடையாள ஆவணமாகக் காட்டி, தமிழ்நாட்டில் அல்லது 12 மாநிலங்களில் வாக்காளர் ஆகலாம் என்று கூறியிருப்பது பெரிய குழப்பத்தை விளைவிக்கும்.
ஒருவர் ஒரு இடத்தில் “சாதாரணமாக குடியிருப்பவராக’ இருந்தால் மட்டுமே அவருக்கு வாக்குரிமை கிடைக்கும் என்று சட்டம் கூறுகிறது. ஒரு மனிதர் ஜூலை 1, 2025 அன்று பீகாரின் சாதாரணமாக குடியிருப்பவர் என்று தேர்தல் ஆணையம் சொல்லிய பிறகு, நான்கைந்து மாதங்களில் அவர் வேறு மாநிலத்தில் எப்படி வாக்காளர் ஆக முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்ப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.
தயார்நிலை திமுக
“தவிர்க்க இயலாத சூழ்நிலையில் இந்த SIR-ஐ எதிர்கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்துக் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் ஒருங்கிணைத்து, பிஎல்ஏ 2-க்கு உரிய பயிற்சியை நாங்கள் கட்சி சார்பாகச் செய்திருக்கிறோம்.
கழகத் தலைவர் அறிவுறுத்தலின் பேரில், வாக்காளர்களின் வாக்குகளைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்காகத் தலைமை கழகத்தில் எட்டு வழக்கறிஞர்களையும், விளையாட்டு அணியைச் சேர்ந்த திரு கௌதமனையும், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த ஒருவரையும் நியமித்து ஒரு அணியைத் துவங்கி இருக்கிறோம்” என்று என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
திமுகவின் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், “எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரும் நீக்கப்படக் கூடாது, எந்த ஒரு தகுதியற்ற வாக்காளரும் சேர்க்கப்படக் கூடாது என்பதே எங்களுடைய கோரிக்கை” என்று தெரிவித்தார்.
அதிமுகவின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் அதிமுக ஆதரிக்கத்தான் செய்வார்கள்” என்று பதிலளித்தார்.
