பிரதமர் மோடியின் கல்வி பட்டத்தை வெளியிடாததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மறுஆய்வு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
பிரதமரின் படிப்பு சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்ட தலைமை தகவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது. குஜராத் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழக்கு தொடர்ந்ததற்காக கெஜ்ரிவாலுக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

