Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எங்க பார்த்தாலும் போதைப் பொருள்.. முதலமைச்சர் இன்னும் ஏன் ராஜினாமா செய்யல? கும்பகர்ண தூக்கமா? இபிஎஸ் கேள்வி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 11, 2024
in Default
1
எங்க பார்த்தாலும் போதைப் பொருள்.. முதலமைச்சர் இன்னும் ஏன் ராஜினாமா செய்யல? கும்பகர்ண தூக்கமா? இபிஎஸ் கேள்வி!
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் போதைப்பொருள் இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பண்ணைக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டதில் 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருள் மற்றும் 874 கிலோ எடையுள்ள கஞ்சா பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 110 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக சுல்தான் என்பவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து திமுக அரசை விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 110 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த விடியா ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது.

அஇஅதிமுக ஆட்சியில் தனக்கு தும்மல் வந்தாலும் நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன இன்றைய முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு தார்மீக பொறுப்பேற்று இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்?

அஇஅதிமுக ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்திற்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்த சமூகப் பொறுப்பாளர்கள் பலர், தற்போது திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்?

தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு காவல்துறை, கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் விடியா முதல்வரைப் போலன்றி, துரிதமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

Previous Post

“ED ரெய்டு முடிந்தபிறகு கட்சி தாவும் கலாச்சாரம்” : திரிணாமூலை தொடர்ந்து சிவசேனா(UBT) தலைவர் தாவல்..

Next Post

பாலியல் வழக்கில் தொடர்ந்து தலைமறைவு.. முன்னாள் டிஜிபிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாலியல் வழக்கில் தொடர்ந்து தலைமறைவு.. முன்னாள் டிஜிபிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

பாலியல் வழக்கில் தொடர்ந்து தலைமறைவு.. முன்னாள் டிஜிபிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்களே தங்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது தமிழகத்தில் அதுவும் சட்டசபைக்குள்ளே குட்கா கொண்டுவரப்பட்டது எல்லாம் பொதுமக்களுக்கு இன்னும் நினைவில் தான் இருக்கிறது தங்கள் ஆட்சியைப் பற்றி தங்கள் ஆட்சியின் போது போதை பொருள்களின் நடமாட்டத்தை பற்றியும் பொதுமக்கள் அனைவரும் அறிவார் எனவே ஏதோ தாங்கள் காந்தியை போல் பேச வேண்டாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In