Last Updated:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முடியாது என்ற வரைவுத் தீர்மானத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது தேசிய மாநாடு வரும் ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள வரைவுத் தீர்மானங்கள் கொல்கத்தாவில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
அதில் காங்கிரஸ் கட்சி தனது பொருளாதார கொள்கையை மாற்றவில்லை என்றும் முதலாளிகளை உருவாக்கும் புதிய தாராளமயக் கொள்கையை காங்கிரஸ் இன்றும் பின்பற்றுவதாக கூறப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிரான போராட்டத்திலும், மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமையிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பங்கு உண்டு என கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் கூட்டணியை வைத்துக்கொள்ள முடியாது என தனது வரைவு தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
February 25, 2025 12:46 PM IST

