Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘பீகார் தேர்தலில் போட்டியில்லை.. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார்’ – பிரசாந்த் கிஷோர் பேட்டி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2025
in அரசியல் செய்திகள்
0
‘பீகார் தேர்தலில் போட்டியில்லை.. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார்’ – பிரசாந்த் கிஷோர் பேட்டி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 15, 2025 5:23 PM IST

காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியிலும் வெற்றி வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன – பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து பேட்டி அளித்துள்ளார். இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

ஐபேக் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி பல்வேறு தேர்தல்களில் வியூக வகுப்பாளராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர் தற்போது முழு நேர அரசியல்வாதியாக இருந்து வருகிறார். அவர் ஜன் சுராஜ் என்ற கட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது கட்சி பீகார் தேர்தலில் களம் காணவுள்ளது.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கின்றன.

எதிர்த்தரப்பில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீண்டும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இருப்பினும் அவர் போட்டியிட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டவும், கட்சியை வலுப்படுத்தவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) நிச்சயமாகத் தோல்வி ஏற்படும். நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.யு (JDU) கட்சி 25 இடங்களைக் கூட வெல்லப் போராடும். நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

இதேபோன்று காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியிலும் வெற்றி வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. அந்த கூட்டணி தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 15, 2025 4:41 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

‘பீகார் தேர்தலில் போட்டியில்லை.. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார்’ – பிரசாந்த் கிஷோர் பேட்டி



.

Previous Post

`உங்கள் மீது வரி விதிப்பேன்' – பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீனா? – என்ன நடக்கிறது?

Next Post

கூகுள் ஏஐ ஹப்: “ஆந்திரா தொழில்நுட்பத்தில் பெரும் மைல் கல்” – ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை | Google AI Hub: “A major milestone in Andhra Pradesh technology” – Annamalai criticizes Stalin

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கூகுள் ஏஐ ஹப்: “ஆந்திரா தொழில்நுட்பத்தில் பெரும் மைல் கல்” – ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை | Google AI Hub: “A major milestone in Andhra Pradesh technology” – Annamalai criticizes Stalin

கூகுள் ஏஐ ஹப்: "ஆந்திரா தொழில்நுட்பத்தில் பெரும் மைல் கல்" - ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை | Google AI Hub: "A major milestone in Andhra Pradesh technology" - Annamalai criticizes Stalin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In