வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி: டில்லியில் நடந்த ஐக்கிய ஜனதா தளத்தின்(ஐஜத) செயற்குழு கூட்டத்தில் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
டில்லியில் ஐஜத கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவராக இருந்த லாலன் சிங் பதவி விலகினார். இதனையடுத்து, நிதீஷ்குமார் ஒரு மனதாக கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்திற்கு பிறகு லாலன் சிங் கூறுகையில், கட்சியில் பிளவு என்பது இல்லை. எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை. நான் ஏன் கோபப்பட வேண்டும். இந்த வார்த்தையை இப்போது தான் கேட்கிறேன் என்றார்.
பீஹாரின் முன்கர் தொகுதி எம்.பி.,யான லாலன் சிங், தேர்தலில் கவனம் செலுத்த ஏதுவாக தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக நிதிஷ்குமாரிடம் கூறியுள்ளார்.
இது பற்றி பீஹார் அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி கூறும்போது, தேர்தலில் கவனம் செலுத்த விரும்புவதால் தலைவர் பதவியை நிதீஷ்குமாரிடம் ஒப்படைக்க லாலன் சிங் விருப்பம் தெரிவித்தார். இதனை நிதீஷ்குமாரும் ஏற்றுக்கொண்டார் என்றார்.
எதிர்க்கட்சிகளின் ‛இண்டியா’ கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் நிதீஷ்குமார் உள்ளார். இச்சூழ்நிலையில், கட்சியின் தலைவராக நிதீஷ்குமார் தேர்வாகி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


