Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

6 இஸ்லாமிய நாடுகளில் குண்டு போட்டவர் ஒபாமா.. அவரை நம்ப முடியுமா? நிர்மலா சீதாராமன் பதிலடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 26, 2023
in அரசியல் செய்திகள்
0
6 இஸ்லாமிய நாடுகளில் குண்டு போட்டவர் ஒபாமா.. அவரை நம்ப முடியுமா? நிர்மலா சீதாராமன் பதிலடி!
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Vignesh Selvaraj
Published: Monday, June 26, 2023, 0:23 [IST]
டெல்லி: இந்திய பிரதமர் மோடி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்த நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு நிகழ்வுகளிலும், வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்திலும் கலந்துகொண்டார். அதில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடியிடம் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன. அமெரிக்காவில் மோடி: அப்போது, பிரதமர் மோடியிடம் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மோடி பதிலளிக்கும்போது, “சாதி, மதம், பாலினம் ஆகிய பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை” என்றார். அதே நாளில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், இந்திய பிரதமர் மோடியுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், அவரிடம் நீங்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்காவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியாவில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளது என்று கூறுவேன் எனத் தெரிவித்தார். நிர்மலா சீதாராமன் பதிலடி: அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலுக்கு ஆதரவு தெரிவித்தும், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கருத்து தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவேன் என்ற ஒபாமாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒபாமாவின் ஆட்சி காலத்தில் ஆறு இஸ்லாமிய நாடுகளின் மீது அமெரிக்கா குண்டு வீசியதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். 6 முஸ்லீம் நாடுகளில்: “பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அமெரிக்க முன்னாள் அதிபர், இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து பேசுகிறார். இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் நான் நிதானத்துடன் இதைச் சொல்கிறேன். எங்களுக்கு அமெரிக்காவுடன் நட்பு வேண்டும். ஆனால் அங்கேயும் இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி கருத்துகள் எழுகின்றன. ஒரு முன்னாள் ஜனாதிபதி, அவரது ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும்ஆறு நாடுகளில் 26,000 க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. அப்படி இருக்கும்போது அவரது குற்றச்சாட்டுகளை மக்கள் எப்படி நம்புவார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். தொடரும் சர்ச்சை: மேலும், நாட்டின் பிரதமராக மோடிக்கு வழங்கப்பட்ட 13 விருதுகளில், 6 விருதுகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளால் வழங்கப்பட்டுள்ளன. கையில் அடிப்படை தரவுகள் இல்லாமல் வெறும் குற்றச்சாட்டுகளை கூறுவது இவை ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரங்கள் என்று நமக்கு எடுத்துசொல்கிறது. ‘ஹுசைன் ஒபாமா’.. அசாம் முதல்வர் ஹிமந்த ட்வீட்டால் பரபரப்பு.. வரிந்து கட்டி இறங்கிய எதிர்க்கட்சிகள்! தேர்தலில் பாஜகவையோ அல்லது பிரதமர் மோடியையோ கடந்த சில தேர்தல்களில் எதிர்க்க முடியாது என்பதால்தான், அவர்கள் இதுபோன்ற பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். மேலும் இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு” என நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். முன்னதாக, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அவரது மாநில காவல்துறை இந்தியாவில் உள்ள பல ஹூசைன் ஒபாமாக்கள் கவனம் வைப்பதில் முன்னுரிமை கொடுத்து வருவதாக, ஒபாமா கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Finance Minister Nirmala Sitharaman lashed out at Former US President Barack Obama for an interview in which he said he would raise the subject of Indian Muslims with PM Modi.
Story first published: Monday, June 26, 2023, 0:23 [IST]

.

Previous Post

எமர்ஜென்சி: “நமது வரலாற்றில் மறக்க முடியாத காலம்!” – பிரதமர் மோடி | The Emergency remain an unforgettable period in our history says modi

Next Post

ஆன்மிகத்தால் மக்களை பிரிக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆன்மிகத்தால் மக்களை பிரிக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

ஆன்மிகத்தால் மக்களை பிரிக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In