Last Updated:
நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் புதிய, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதாவை தாக்கல் செய்கிறார். 60 ஆண்டுகளுக்கு பின் மாற்றம். ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வரும்.
60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக, புதிய மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
புதிய, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதாவை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். கடந்த ஒன்றாம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், புதிய, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதாவை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த புதிய மசோதா நேரடி வரி சட்டங்களை புரிந்து கொள்வதை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மசோதா நிறைவேறினால் அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இதேபோன்று வக்பு சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கையும் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
February 13, 2025 7:06 AM IST

