உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்துக்கு அருகே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என ஞாயிற்றுக்கிழமையன்று உயர்ந்துள்ளது.
“பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேடுதல் நடவடிக்கையின் போது பனிகளுக்கு உள்ளே சிக்கியிருந்த மேலும் ஒரு உடல் ராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இந்த உடல் மனா போஸ்ட் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. மூன்று பேர் வரை காணவில்லை.
