தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ’ஹிஜ்புர் தகர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.
இது குறித்த விரிவான தகவல்கள் சோதனை நிறைவடைந்ததும் என்ஐஏ தரப்பிலிருந்து வெளியிடப்படுமென தெரிகிறது.
