Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து – குதித்து தப்பிய புதிய வீடியோ

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 17, 2025
in அரசியல் செய்திகள்
0
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து – குதித்து தப்பிய புதிய வீடியோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 17, 2025 4:26 PM IST

Ahmedabad Plane Crash New Video | கடந்த 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியாவின் 171 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதி தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

விமான விபத்து புதிய வீடியோவிமான விபத்து புதிய வீடியோ
விமான விபத்து புதிய வீடியோ

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின்போது, மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்து மருத்துவ மாணவர்கள் சிலர், பால்கனி வழியாக குதித்து உயிர் தப்பிய புதிய வீடியோ வெளியாகி இருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 11 ஏ என்ற இருக்கையில் இருந்த விஷ்வாஷ் குமார் மட்டும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட மற்ற அனைத்து விமான பயணிகளும் உயிரிழந்தனர்.

அதேநேரம் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் உணவு அருந்திக் கொண்டு இருந்த 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 20 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகவும், அதில் 11 பேர் உடல்நலம் அடைந்து வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, விடுதி வளாகத்திற்குள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களின் குடியிருப்பில், மருத்துவர்களின் உறவினர்கள் 4 பேர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்த போது, விடுதியில் இருந்து மருத்துவ மாணவர்கள் சிலர், பால்கனி வழியாக குதித்து உயிர் தப்பிய புதிய வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் உதவி கேட்ட காட்சிகளும், அனைவரையும் காப்பாற்ற உள்ளூர் மக்கள் கூச்சலிட்ட காட்சிகளும் உள்ளன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Ahmedabad,Gujarat

First Published :

June 17, 2025 4:08 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Ahmedabad Plane Crash New Video | அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து : மாணவர்கள் பால்கனி வழியாக குதித்து உயிர் தப்பிய வீடியோ



.

Previous Post

புதிய படங்களில் ஒப்பந்தமாகிவரும் காவ்யா அறிவுமணி!

Next Post

அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!

அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In