மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வு குறித்து முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர் என்று ANI என்னும் அதிகாரப்போர்வ நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை பல ஆளும் கட்சி நபர்கள் பதிவிட்டு மணிப்பூர் நிகழ்விற்கு மத சாயம் பூசினர்.
அதை புதியதலைமுறை Twitter சேனலும் வெளியிடிருந்தது. இது பொய் செய்தி ஆகையால் ANI நிறுவனம் அதை நீக்கியது.
ஆகவே புதியதலைமுறை சேனலும் அவர்கள் வெளியிட்ட பொய் செய்திக்கு மன்னிப்பு கோரி இன்று Twit செய்துள்ளனர்… அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது…
” பிற மாநில செய்திகளை வழங்கும் ஏஜென்சிகளில் ஒன்றான @ANI , மணிப்பூர் நிகழ்வில் வழங்கிய செய்தியை அப்படியே பகிர்ந்திருந்தோம். @zoo_bear சுட்டிக்காட்டியது கவனத்தில் வந்த உடனே அது நீக்கப்பட்டு விட்டது. ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்த அந்தச் செய்தியில் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று உணர்கிறோம். வருந்துகிறோம்… 🙏🏻“


செய்திகளை உடனுக்குடன் முதல் முதலாக முந்தித் தர வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தி வெளியிடும்போது ஏற்படும் குளறுபடியே இருப்பினும் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு அதன் உண்மை தன்மையை பார்க்க வேண்டும் அதன் பிறகே வெளியிட வேண்டும் சேனல் முன் வந்து வருத்தம் தெரிவித்தது வரவேற்க வேண்டியது