ராய்ப்பூர்–தன்பாத் விரைவுச் சாலை வெறும் போக்குவரத்து இணைப்பாக மட்டுமல்லாமல், தொழில் வழித்தடத்திற்கு (industrial corridor) ஒரு பெரும் ஊக்கமாகவும் அமையும். சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களும் கனிம வளங்கள் நிறைந்த முன்னணி மாநிலங்களாகும். எனவே, இந்த விரைவுச் சாலை நிலக்கரித் தொழில், சுரங்கப் பகுதிகள் மற்றும் ஒட்டுமொத்த தொழில் வழித்தடத்திற்கும் நேரடியான மற்றும் பாதுகாப்பான இணைப்பை வழங்கும். ராய்ப்பூர், பிலாஸ்பூர், கோர்பா, ஜஷ்பூர், ராஞ்சி, பொகாரோ மற்றும் தன்பாத் உள்ளிட்ட இரு மாநிலங்களின் முக்கிய தொழில் மையங்கள் வழியாக இந்தச் சாலை செல்வதால், தொழில் துறைக்கு இது மிகப்பெரிய நன்மையை அளிக்கும்.

