Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திமுகவினர் அமைத்த நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு… புதுக்கோட்டையில் பரபரப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 3, 2024
in Default
1
திமுகவினர் அமைத்த நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு… புதுக்கோட்டையில் பரபரப்பு!
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுக்கோட்டை அருகே திமுக நிர்வாகி அமைத்திருந்த நீர் மோர் பந்தல், மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கடும் வெயில் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதையொட்டி அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் நீர்மோர் மட்டுமின்றி குடிநீர் மற்றும் அதிக நீர் சத்துள்ள பழங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நள்ளிரவில் மர்ம நபர்கள் தீவைத்ததாக குற்றச்சாட்டு

நள்ளிரவில் மர்ம நபர்கள் தீவைத்ததாக குற்றச்சாட்டு

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது. இதில் திமுக மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பழனி சார்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அமரடக்கி பகுதியில் நீர்மோர் பந்தல் ஒன்று திறக்கப்பட்டது. இதில் பகல் வேலைகளில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பந்தல் தீப்பிடித்து எரிவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தகவல் அளித்தனர்.

தீவைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் திரண்டதால் பரபரப்பு

தீவைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் திரண்டதால் பரபரப்பு

சம்பவ இடத்திற்கு இரண்டு தரப்பும் விரைந்து சென்று பார்த்தபோது, பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது தெரிய வந்தது. மர்ம நபர்கள் சிலர் இந்த பந்தலுக்கு தீ வைத்து சென்றிருக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, திமுக நிர்வாகி ராமநாதன், பழனி உள்ளிட்டோர் சார்பில் ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பந்தலுக்கு தீ வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று திமுகவினர் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அனைவரையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

Previous Post

கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..

Next Post

புதிதாக வீடு கட்டிய முதியவரிடம் பணம் கேட்டு தாக்குதல்; திமுக பிரமுகர்கள் மீது புகார்… சென்னையில் அதிர்ச்சி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிதாக வீடு கட்டிய முதியவரிடம் பணம் கேட்டு தாக்குதல்; திமுக பிரமுகர்கள் மீது புகார்… சென்னையில் அதிர்ச்சி!

புதிதாக வீடு கட்டிய முதியவரிடம் பணம் கேட்டு தாக்குதல்; திமுக பிரமுகர்கள் மீது புகார்... சென்னையில் அதிர்ச்சி!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கெட்டது செய்தால் எதிர்க்க இயலாமல் அமைதியாக இருக்கும் நம் மக்கள் ஒரு நல்லது அதாவது நீர்மோர் பந்தல் வைத்தால் அதை போய் எரிப்பது போன்ற மட்டமான வேலைகளில் செயல்படுகின்றனர் இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In