Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 17, 2025
in அரசியல் செய்திகள்
0
நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய பிரதேசத்தில் மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கால் நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடக்கூடாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக கடந்த 4-ம் தேதி, சென்னை ஆவடி மையத்தில் 464 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், அன்று பெய்த கனமழையால் மதியம் 3 மணியில் இருந்து மாலை 4.15 மணி வரை அந்த மையத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் “நீட் மறு தேர்வு’ நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கவும், மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கும் கால அவகாசம் வேண்டும் என்று வாதாடினார்.

இதையடுத்து, ‘அதுவரை நீட் தேர்வின் முடிவுகளை வெளியிடக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



.

Previous Post

‘தரங்கெட்ட தறுதலை மொழியில் பாஜகவின் வாட்சப் யூனிவர்சிட்டி தகவல்களை வாந்தி எடுப்பதா!’ ஈபிஎஸை விளாசும் ஆர்.எஸ்.பாரதி!

Next Post

ஓராண்டில் 3 கோப்பைகள்: ஊர்வலம் சென்ற பார்சிலோனா, 6 லட்சம் ரசிகர்கள் பங்கேற்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓராண்டில் 3 கோப்பைகள்: ஊர்வலம் சென்ற பார்சிலோனா, 6 லட்சம் ரசிகர்கள் பங்கேற்பு!

ஓராண்டில் 3 கோப்பைகள்: ஊர்வலம் சென்ற பார்சிலோனா, 6 லட்சம் ரசிகர்கள் பங்கேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In