Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஜக நிர்வாகியை கொன்ற நக்ஸலைட்கள்! சத்தீஸ்கரில் 7 நாளில் ஐந்து பேர் கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 12, 2024
in அரசியல் செய்திகள்
0
பாஜக நிர்வாகியை கொன்ற நக்ஸலைட்கள்! சத்தீஸ்கரில் 7 நாளில் ஐந்து பேர் கொலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் நக்ஸல் கும்பலால் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பிரமுகரின் கொலை மட்டுமின்றி கடந்த ஏழு நாளில் மட்டும், பிஜப்பூர் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து பேரை நக்ஸலைட் கும்பல் கொன்றிருப்பதும், அந்த மாவட்டத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிக நக்ஸல் நடமாட்டம் கொண்ட மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். இங்கு அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்ஸலுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடப்பதும், நக்ஸல்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதும் நடந்துவருகிறது.

விளம்பரம்

தற்போது நேற்று (10ஆம் தேதி) இரவு பாஜக பிரமுகரான குடியம் மாடோ என்பவரை நக்ஸல் கும்பல் கொடூரமாக கொன்றுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சோமன்பள்ளி கிராமத்தில் வசித்துவந்தவர் குடியம் மாடோ (35). இவர் பாஜக நிர்வாகியாகவும் இருந்துவந்தார். நேற்று இரவு இவரது வீட்டிற்குள் நுழைந்த நக்ஸலைட் கும்பல், அவரை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து அவரின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு சென்றுள்ளது.

இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், குடியம் மாடோ உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.

விளம்பரம்
தீபத்திருவிழாவுக்கு திருவண்ணாமலை போக போறீங்களா.? அப்போ இந்த தமிழக அரசு அறிவிப்பு உங்களுக்கு தான்.!


தீபத்திருவிழாவுக்கு திருவண்ணாமலை போக போறீங்களா.? அப்போ இந்த தமிழக அரசு அறிவிப்பு உங்களுக்கு தான்.!

குடியம் மாடோ கொல்லப்பட்டு கிடந்த இடத்தில் காவல்துறையினர் ஒரு துண்டு பிரசுரத்தையும் கண்டெடுத்துள்ளனர். அதில் மாடோ, நக்ஸலைட்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து வந்ததாகவும், அதன் காரணமாக அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மாவோயிஸ்டுகளின் தேசிய பூங்கா பகுதிக் குழு இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்பதாகவும் இருந்தது.

இந்தக் கொலையைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீஸார் தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர்.

இதற்கு முன்பாக, பிஜப்பூர் மாவட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி இருவர் நக்ஸலைட்களால் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் பாஜக பிரமுகர். அதேபோல், டிசம்பர் 6ஆம் தேதி அங்கன்வாடி ஊழியரான பெண் ஒருவரையும், டிசம்பர் 7ஆம் தேதி ஒரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
‘லக்கி பாஸ்கர்’ பார்த்த பள்ளி மாணவர்கள் விபரீத முடிவு! சோகத்தில் பெற்றோர்கள்

2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மொத்தம் ஒன்பது பாஜக பிரமுகர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

.



.

Previous Post

கார்ட்டூன்: INDIA இருட்டுக்கடை…

Next Post

அம்பேத்கர் சிலை அருகே அரசியலமைப்பு சட்டம் கிழிப்பு: மகாராஷ்டிராவில் வன்முறை… பந்த்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அம்பேத்கர் சிலை அருகே அரசியலமைப்பு சட்டம் கிழிப்பு: மகாராஷ்டிராவில் வன்முறை… பந்த்!

அம்பேத்கர் சிலை அருகே அரசியலமைப்பு சட்டம் கிழிப்பு: மகாராஷ்டிராவில் வன்முறை... பந்த்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In