திருவள்ளூர் அடுத்த பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு என்ற தலைப்பில் நுகர்வோர் T.பாபு, ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் S.மோகன், திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் G.மோகன், கலந்து கொண்டனர்.
பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் M.ஜம்பு, தலைமையேற்று சிறப்பு உரையாற்றினார். திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணவ மாணவிகள் இடையே பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்ட வேண்டும், கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்றும் விழிப்புணர் பற்றி எடுத்துரைத்தார்கள்.
மோட்டார் வாகன ஆய்வாளர் மாணவர்களிடையே 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்றும் தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை பற்றியும் மாணவர்கள் இடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






