Last Updated:
இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரத்தில் பெருமையை வளர்க்க கணிதம் மற்றும் ஆங்கில மொழி பாடப்புத்தகங்களுக்கு இந்திய பெயர்களை வைத்திருப்பதாக சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அறிவியல் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் புதிய பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயரிடப்பட்டதாக NCERT விளக்கம் அளித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாட நூல்களை NCERT உருவாக்கி வழங்கி வருகிறது. NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆங்கில வழி பாடப்புத்தகங்களில் “மிருதங்”, “சந்தூர்” என்றும், கணித பாடப்புத்தகத்திற்கு கணித மேளா, கணித பிரகாஷ் மற்றும் பூர்வி, கிருதி, சிதார் ஆகிய பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Also Read: அலர்ட்.. இந்த இருமல் தடுப்பு மருந்துகளை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்த தடை!
இந்நிலையில், NCERTயின் எக்ஸ் தள பக்க பதிவில், இந்த பாடப்புத்தகங்களின் பெயர்கள் இந்திய மொழிகளில் இருந்து வந்தவை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக இசையுடன் தொடர்புடைய பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தாள வாத்தியமான மிருதங்கத்தில் இருந்து “மிருதங்” பெறப்பட்டதாகவும், பூர்வி என்ற பாரம்பரியமாக அந்தி வேளையில் பாடப்படும் ஒரு ராகத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
The new NCERT textbooks have been thoughtfully named to convey rootedness in India’s culture and knowledge systems. The names of the books are from Indian languages and not specifically Hindi.
English textbook for Grades 1 and 2 is titled ‘Mridang’ derived from Mridangam, a… pic.twitter.com/rskSoS75MT
— NCERT (@ncert) April 17, 2025
இதேபோல், கணித் பிரகாஷ் என்ற தலைப்பு இந்தியாவின் வளமான கணித பாரம்பரியத்தைப் பற்றிய குழந்தைகளின் ஆர்வத்தை ஈர்க்க தேர்ந்தெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு உள்ளது. இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரத்தில் பெருமையை வளர்க்க கணிதம் மற்றும் ஆங்கில மொழி பாடப்புத்தகங்களுக்கு இந்திய பெயர்களை வைத்திருப்பதாக சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
April 19, 2025 10:47 AM IST

