Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதிக்கு நாகாலாந்து அமைச்சர் கண்டனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதிக்கு நாகாலாந்து அமைச்சர் கண்டனம்
32
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: நாகா இன மக்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தி.மு.க., அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு, நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க., அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:நாகாலாந்துகாரன் நாய்க்கறி சாப்பிடுவான்; நாய்க்கறி தின்கிறவனுக்கே, இவ்வளவு சொரணை வந்து, கவர்னர் ரவியை ஓட ஓட விரட்டினான் என்றால், உப்பு போட்டு சோறு சாப்பிடும் தமிழனுக்கு, எந்தளவுக்கு சொரணை இருக்கும் என்பதை அவர் மறந்து விடக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

நாகா இன மக்களை அவதுாறாக பேசிய ஆர்.எஸ்.பாரதிக்கு, கவர்னர் ரவி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தின் சுற்றுலாத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான டெம்ஜென் இம்னா அலோங், ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

ஆர்.எஸ்.பாரதி அவர்களே, உங்கள் பெயரில் ‘பாரதம்’ இருந்த போதும், ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் ஒரு சமூகத்தை அவமதித்து காயப்படுத்த முயற்சித்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

‘இண்டியா’ கூட்டணி கட்சியினரே, தயவுசெய்து உங்கள் வார்த்தைகளை கட்டுப்படுத்துங்கள். எங்கள் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். எங்களையும், எங்கள் கலாசாரத்தையும் அறிந்து கொள்ள வட கிழக்கு பகுதிக்கு வாருங்கள்.

நம் உணவு பழக்கத்தை விமர்சித்தவர்களுக்கு வட கிழக்கு மாநில மக்கள் அனைவரும் இணைந்து தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

.

Previous Post

பிரதமரின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?: ஜெய்ராம் ரமேஷ்

Next Post

போலி விடியோ சித்தரித்தால் 3 ஆண்டுகள் சிறை: மத்திய அரசு எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போலி விடியோ சித்தரித்தால் 3 ஆண்டுகள் சிறை: மத்திய அரசு எச்சரிக்கை

போலி விடியோ சித்தரித்தால் 3 ஆண்டுகள் சிறை: மத்திய அரசு எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In