Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சமீபத்திய செய்திகள்

சென்னையில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் – முட்டுக்காடு செல்ல ரெடியா மக்களே! | Muttukadu boat house is going to have chennai’s very first floating restaurant

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2024
in சமீபத்திய செய்திகள்
0
சென்னையில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் – முட்டுக்காடு செல்ல ரெடியா மக்களே! | Muttukadu boat house is going to have chennai’s very first floating restaurant
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நீங்கள் சென்னையில் உள்ள பலவிதமான உணவகங்களுக்கும் சென்று இருக்கலாம். ஆனால், சென்னையில் முதன்முதலாக துவங்கவிருக்கும் மிதக்கும் உணவகத்திற்கு எப்போது செல்லலாம் என்று பிளான் பண்ணி இருக்கிறீர்கள்? ஆம்! சென்னையை அடுத்த பொழுதுபோக்கு சுற்றுலாத் தலமான முட்டுக்காடு படகு கழம் அருகே இரண்டடுக்கு மிதக்கும் உணவகம் கூடிய விரைவில் துவங்கப்படவிருக்கிறது!

சென்னையில் நம்மை வியக்க வைக்கும் பலவித உணவகங்கள்

நமது சென்னையில் வித விதமான பல உணவகங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். குழந்தைகளுக்கு ஏற்ற, ஆண்களுக்கு ஏற்ற, பெண்களுக்கு என பல பல தீம்களில் உணவகங்கள் உண்டு. கொரியன் BTS ரெஸ்டாரன்ட் முதல், சைனீஸ், பிரெஞ்சு, இத்தாலியன், பர்மீஸ் வரை பல வகையான ரெஸ்டாரன்ட்கள் உண்டு. ஆனால் இப்போது சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு படகு குழாமில் சென்னையிலேயே முதன் முதலாக இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகம் துவங்கப்படவிருக்கிறது. இனி நீங்கள் உப்பங்கழிகளில் இனிமையாக பயணத்தை முடித்த உடன் இந்த அழகிய சூழலில் இருக்கும் மிதக்கும் உணவகத்தில் சுவையான உணவுகளை ருசிக்கலாம் மக்களே!

Floating Restaurant

சென்னையில் முதன்முறையாக மிதக்கும் உணவகம்

சென்னை ECRல் உள்ள முட்டுகாடு படகு இல்லத்தில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை 5 கோடி ரூபாய் செலவில் “மிதக்கும் உணவகம்” என்ற கான்செப்ட்டில் கட்டியுள்ள கப்பலின் கட்டுமான பணிகள் முடிவடைந்து, திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது. இது சென்னை மக்களின் முக்கிய ஹாட்ஸ்பாட் ஆக இருக்கப்போகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) மற்றும் கேரள மாநிலம் கொச்சி-யை அடிப்படையாக கொண்ட கிராண்டியர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் PPP கூட்டமைப்பின் கீழ் இந்த “மிதக்கும் உணவகம்” கப்பல் கட்டப்பட்டது. இந்த கப்பல் குறித்து அதிகாரப்பூர்வ வீடியோ தற்போது வெளியாகி சென்னை மக்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

இனி முட்டுக்காடு படகு குழாமில் மக்கள் முற்றுகை

சென்னையின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருப்பது கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு. இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமில் படகு சவாரி, வாட்டர் ஸ்கூட்டர் என குடும்பத்துடனும் நண்பர்களுடன் பொழுதுபோக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. மேலும் இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக மிதவை படகுகள் இயந்திர படகுகள் சாகச முறையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கே மிதக்கும் உணவகம் திறக்கப்படவிருக்கிறது.

Floating Restaurant

இரண்டு அடுக்கில் பிராமாண்டமாக தயாராகும் ரெஸ்டாரன்ட்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் உணவகத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை எளிதாக உணவருந்த முடியும். படகின் கீழ்த்தளத்தில் குளிரூட்டப்பட்ட டைனிங் ஹாலும், சிறு சிறு தனி அறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேல் தளத்தில் திறந்தவெளி ரெஸ்டாரன்ட் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாலை வேலையில் மேல் தளத்தில் அமர்ந்துக் கொண்டு இயற்கை அழகை ரசித்தப்படியே உணவருந்தினால் எவ்வளவு உற்சாகமாக இருக்கும் அல்லவா!

உற்சாகத்தில் இருக்கும் பொதுமக்கள்

இந்த மிதக்கும் உணவகம் தமிழகத்திலேயே முதன்மையானது. இன்னும் மூன்று மாதங்களில் இந்தபுது வகையான மிதக்கும் உணவகத்தில் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் உணவருந்தலாம். இந்த மிதக்கும் உணவகத்தை மக்கள் வெகுவாக விரும்புவார்கள் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. கூடிய விரைவில், நீங்கள் இங்கே உணவருந்தலாம், படகோட்டி செல்லலாம் மற்றும் மற்ற சாகசச் செயல்களில் ஈடுபடலாம், அதே நேரத்தில் ஏரியிலிருந்து சுற்றியுள்ள பகுதியின் பரந்த காட்சியைப் பார்த்து ரசிக்கலாம்.

முட்டுக்காட்டில் நீங்கள் செய்ய வேண்டியவை

சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே அமைந்திருக்கும் முட்டுக்காடு ஒரு அழகிய கிராமமாகும். உப்பங்கழிகள், பனை பள்ளங்கள், பசுமையான சூழலுக்கு மிகவும் பிரபலமான முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஒரு படகு குழாம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்திற்கு செல்லும் போது நீங்கள் கீழக்கண்ட செயல்களில் ஈடுபடலாம்.
1. படகு சவாரி
2. கயாக்கிங்
3. கேனோயிங்
4. தக்ஷின் சித்ரா
5. MGM Dizee வேர்ல்ட்
6. VGP கோல்டன் பீச் ரிசார்ட்ஸ்

விரைவில் திறப்புவிழா

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் கொச்சியை சேர்ந்த க்ராண்டியூர் மறைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் மூலமாக மிதவை உணவகம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது முட்டுக்காடு மிதவை உணவகம் தற்போது திறப்பு விழாவிற்காக தயாராகியுள்ளதால் விரைவில் திறக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet



.

Previous Post

திண்டுக்கல் சீனிவாசன் வெடி… தடுமாறிய தங்கமணி… ADMK குஸ்தி?! | Elangovan Explains

Next Post

10, 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
10, 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

10, 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In