Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதுரை: அடைக்கப்பட்ட கால்வாய்… குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; கவனிக்குமா பேரூராட்சி? | Sewage water enters in people living area in madurai

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2024
in அரசியல் செய்திகள்
0
மதுரை: அடைக்கப்பட்ட கால்வாய்… குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; கவனிக்குமா பேரூராட்சி? | Sewage water enters in people living area in madurai
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் கோகுல் நகர் தெருப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கழிவு நீர் கால்வாய் செல்லும் வழி அடைக்கப்பட்டிருப்பதால், கழிவு நீர் தேங்கிய நிலையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்புவரை இத்தெருவில் உள்ள கழிவுநீர்க் கால்வாய், தெருவைத் தாண்டி பக்கத்திலுள்ள ஒடைக்கு அருகில் திருப்பப்பட்டிருந்தது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் விவசாய நிலங்களும் இருக்கின்றன.

மதுரை - கோகுல் நகர் தெருமதுரை - கோகுல் நகர் தெரு

மதுரை – கோகுல் நகர் தெரு

இந்த நிலத்தின் உரிமையாளர்கள், கழிவு நீர் தங்கள் நிலத்தின் ஓரத்தின் செல்வதால் மழைக்காலங்களில் கழிவுநீர் தங்கள் நிலத்துக்குள் வந்துவிடுவதாகக் கழிவு நீர் செல்லும் வழியை அடைத்துவிட்டனர். மேலும் பக்கத்து தெருக்களின் கழிவு நீரும் இந்தத் தெருவின் கழிவுநீர் கால்வாய் வழியாகவே வந்தது. தற்போது, பக்கத்து தெருக்களிலிருந்து வரும் கழிவு நீர், வேறு கழிவுநீர் கால்வாய் வழியாகப் பக்கத்திலுள்ள பண்டாரங்குளத்துக்கு (கழிவுநீர் குளம்) மாற்றிவிடப்பட்டாகிவிட்டது.

மதுரை - கோகுல் நகர் தெருமதுரை - கோகுல் நகர் தெரு

மதுரை – கோகுல் நகர் தெரு

ஆனால், கோகுல் நகர் தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டிருப்பதால் இந்தத் தெருவிலுள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் கால்வாயிலேயே தேங்கி விடுகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் கழிவுநீர் சாலைகளுக்குள் வந்து விடுகிறது. அதோடு, வீடுகளுக்கு அருகிலேயே கால்வாயில் கழிவுநீர் தேங்குவதால் ஈ மற்றும் கொசுக்களின் தொல்லை மாலை மற்றும் இரவு நேரங்களில் மிகவும் அதிகமாக இருக்கிறது. குடியிருப்புவாசிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறிருக்க, தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றி வேறு இடத்துக்குச் செல்லும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தித் தருமாறு பேரூராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.



.

Previous Post

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இளையராஜா!

Next Post

செந்தில் பாலாஜி: `உத்தரவில் குழப்பம்’ கடைசி நேர களேபரம் – முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்ததென்ன? | chennai sessions court accept jailed DMK ex minister senthil balaji bail guarantee

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செந்தில் பாலாஜி: `உத்தரவில் குழப்பம்’ கடைசி நேர களேபரம் – முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்ததென்ன? | chennai sessions court accept jailed DMK ex minister senthil balaji bail guarantee

செந்தில் பாலாஜி: `உத்தரவில் குழப்பம்’ கடைசி நேர களேபரம் - முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்ததென்ன? | chennai sessions court accept jailed DMK ex minister senthil balaji bail guarantee

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In