Last Updated:
இரவு நேரத்தில் சாலையில் குப்பைகளை கொட்டி சென்ற நபருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிய நகராட்சி ஊழியர்கள் செய்த செயல் பலரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.
சாலையில் குப்பைகளை கொட்டிக் கொண்டிருந்த ஒரு கடைக்காரருக்கு நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அளித்தனர். அவர்கள் புல்டோசர் மூலம் குப்பைகளை கொண்டு வந்து கடையின் முன் கொட்டினர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அசாமின் டின்சுகியாவில் நடந்தது. டெய்லி பஜார் பகுதியில் உள்ள ஒரு கடை உரிமையாளர் தினமும் சாலையில் குப்பைகளை வீசுகிறார். கடை மூடப்பட்டிருக்கும் இரவில் இதைச் செய்கிறார்.
இதற்கிடையில், திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில், மளிகை மற்றும் கிபிட் கடையின் ஊழியர் ஒருவர் அங்குள்ள சாலையில் குப்பைகளைக் கொட்டினார். இரவுப் பணியில் இருந்த தின்சுகியா நகராட்சி வாரிய ஊழியர்கள் இதைப் பார்த்து, சாலையில் குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருந்த ஊழியரிடம் விசாரித்தனர். அவர் எந்தக் கடையை சேர்ந்த ஊழியர் என்பதைக் கண்டுபிடித்தனர். கடையை கண்டுபிடித்த போதிலும் அவர்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை, மாறாக வேறு வழியில் அவர்களை தண்டிக்க முடிவெடுத்தனர்.
மறுநாள் காலையில், நகராட்சி ஊழியர்கள் அந்த கடைக்கு வந்து, புல்டோசர் மூலம் கொண்டு வரப்பட்ட குப்பைகளை கடையின் கடையின் மூடிய ஷட்டருக்கு முன்னால் அனைத்து குப்பைகளையும் கொட்டினர். இதுதவிர கடையின் முன் கொட்டப்பட்ட குப்பைகளை மண்வெட்டியால் பரப்பினர். மேலும் சாலையில் குப்பைகளை வீசிக்கொண்டிருந்த கடை உரிமையாளரை கண்டித்தனர்.
இதுகுறித்து டின்சுகியா நகராட்சி வாரியத் தலைவர் புலக் சேதாய் ஊடகங்களுக்கு கூறியதாவது, கடை உரிமையாளர் இந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து வருவதாகவும், அதனால்தான் அவருக்கு பாடம் கற்பிக்க இதுபோன்ற நடவடிக்கையை செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், நகரத்தின் தூய்மையைப் பராமரிப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
All shopkeepers in Tinsukia, Assam were asked to not throw garbage on the road.
But one guy didn’t listen and dumped garbage on the road.And next day, garbage was dumped in front of his shop by municipal board 😂
Maybe this is the only solution to keep streets clean. pic.twitter.com/BZr6lw8g3R
— Incognito (@Incognito_qfs) September 8, 2025
வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு சிறுவன் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தியிருக்கும் இடத்தில் குப்பைகளை கொட்டுவதை காணாலாம். அதை கண்ட நகராட்சி அதிகாரிகளில் ஒருவர், அந்த சிறுவனிடம் கடையின் பெயரை கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன் கடையின் பெயர் ரிகார்ட்ஸ் என்று கூறுவதையும் கேட்கலாம். பின்னர் அந்த அதிகாரி சிறுவனின் பின்னல் சென்று கடையை கண்டுபிடிப்பதையும் காணலாம்.
இதனையடுத்து மறுநாள் காலை, புல்டோசர் மூலம் கொண்டு வந்த குப்பைகளை கடையின் முன் கொட்டுகிறார்கள். பின்னர் ஒரு ஊழியர் வெளியில் சிதறியிருந்த குப்பைகள் மண்வெட்டியின் உதவியுடன் ஷுட்டரின் முன் பரப்புவதையும் காணலாம். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையைப் பாராட்டி தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
September 16, 2025 8:20 AM IST
” முள்ளை முள்ளால் எடு” சாலையில் குப்பையை கொட்டிய நபரின் கடை வாசலில் மலைபோல் குப்பைகளை குவித்த நகராட்சி ஊழியர்கள்!

