Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

லாரிகளின் முறைகேடுக்கு மாநகராட்சி செக்; வந்தாச்சு ஸ்மார்ட் தானியங்கி எடை மையம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 12, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
லாரிகளின் முறைகேடுக்கு மாநகராட்சி செக்;  வந்தாச்சு ஸ்மார்ட் தானியங்கி எடை மையம்
19
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தினமும் 800 டன் குப்பை சேருகிறது. இதை தரம் பிரித்து மக்கும் குப்பையை நுண்ணுயிர் உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பை வெள்ளக்கல்லுக்கு கொண்டு செல்லப்பட்டு பிளாஸ்டிக் உட்பட இதர கழிவுகளை பிரித்தெடுக்கும் பணிகள் நடக்கின்றன.

வார்டுகளில் சேரும் குப்பையை டம்பர்பின் லாரிகள், நடமாடும் வண்டிகள் மூலம் சேகரிக்கின்றனர். இதில் மாநகராட்சி, தினக்கூலி, தனியார் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். ஒரு டம்பர்பின் லாரி தினமும் 5 டிரிப்கள் குப்பையை வெள்ளக்கல் மையத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். வார்டுகளில் உள்ள தொட்டிகளில் குப்பை நிரம்பியிருக்கக் கூடாது என்பது நிபந்தனை. ஆனால் ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் வார்டுகளில் ஏராளமான குப்பை தேங்குவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஜி.பி.எஸ்., கருவியால் குப்பை அள்ளும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. தற்போது வெள்ளக்கல்லில் ரூ. 12 லட்சத்தில் ரேடியோ அலைவரிசை அடையாளம் (ஆர்.எப்.ஐ.டி.,), இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐ.ஓ.டி.,) மூலம் 24 மணிநேர ‘ஸ்மார்ட்’ தானியங்கி எடை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை கமிஷனர் மதுபாலன் நேற்று ஆய்வு செய்தார். நாளை முதல் (டிச.13) இது நடைமுறைக்கு வருகிறது.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: குப்பை சேகரிப்பு பணிக்கு வாகனங்களுக்கு தினமும் 5,800 லிட்டர் டீசல் வழங்கப்பட்ட நிலையில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்திய பின் 4,500 லிட்டராக குறைந்தது. அதேசமயம் குப்பையின் எடையை துல்லியமாக கணிப்பது சவாலாக இருந்தது.

வாகனங்கள் முழு கொள்ளளவிலும் குப்பை அள்ள வேண்டும். ஆனால் சில வாகனங்கள் அதற்கு ஒதுக்கிய அனைத்து வார்டுகளுக்கும் செல்லாமல், பெயருக்கு பாதி குப்பையை நிரப்பி ‘டிரிப்’ கணக்கை சரி செய்தன. இதனால் மாநகராட்சிக்கு டீசல் இழப்பு ஏற்பட்டது. இதற்கும் ‘செக்’ வைக்கும் வகையில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குப்பையின் எடை அளவை துல்லியமாக அளக்க முடியும். லாரி வருகை நேரம், எண்கள் உள்ளிட்ட தகவல்களை படத்துடன் தானியங்கி முறையில் பதிவு செய்யும். இதனால் டீசல் ஒதுக்கீடு மூலம் ஏற்படும் இழப்பும் தடுக்கப்படும் என்றார்.

.

Previous Post

பூட்டானில் ராணுவ முகாம்: சீனா மீண்டும் விஷமம்

Next Post

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: கடந்து வந்த பாதை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: கடந்து வந்த பாதை

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: கடந்து வந்த பாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In