சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உட்பட நான்கு வகையான தேர்தல் அதிகாரிகள் இடம் பெற்று இருப்பர். அதன்படி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 19,400 அதிகாரிகள் தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த அதிகாரிகளுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் கடந்த வாரம் நடத்தப்பட்டன. இந்த பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுதல், வாக்குப்பதிவு விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளாத 1,500 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், தேர்தல் பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளை பயிற்சி அளிக்கப்படும் என ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒரு மாநகராட்சி ஆணையரின் உத்தரவு படி பயிற்சி வகுப்புக்கு வராத இந்த 1500 அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் இவர்கள் திருந்துவார்கள் அதை விட்டுவிட்டு மீண்டும் பயிற்சி வகுப்பு நடத்தினால் தவறு அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது இது போன்ற அரசு அலுவலர்களே ஆணையரின் உத்தரவை மதிக்காத போது பொதுமக்களின் புகார் மனுவையும் வேண்டுகோள் மனுவையும் எப்படி மதித்து நடவடிக்கை எடுப்பார்கள்