என்ன வழக்கு?
மும்பை புறநகர் ரயில் சேவையில், கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி, மேற்கு வழித்தடத்தில் பல்வேறு ரயில்களில் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அதில் 180 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. அதில் 5 பேருக்கு மரண தண்டனையும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
இந்த தீர்ப்பையடுத்து, மகாராஷ்டிர அரசு, மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளும் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நாள்தோறும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 12 பேரும் விடியோ கான்பரன்சிங் மூலம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் மீதான தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து, அவர்களை விடுவித்துள்ளதோடு, அவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு “முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
தீர்ப்பைக் கேட்ட குற்றவாளிகள், தங்களது வழக்குரைஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
