ஆய்வினை தொடர்ந்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் நடைபெற்றது. இதில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, சாலையை பயன்படுத்துவது பேபி அணைப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, இரு மாநிலங்களும் உபகரணங்களை எடுத்து செல்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பத்திரிகையாளார்களிடம் பேசிய தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் , “ அணையின் கருவிகள், நீர் இயந்திரங்கள், அணையின் அமைப்பை பார்வையிட்டோம். 2025 பருவமழைக்குப் பிறகு அணையின் நிலையை ஆய்வு செய்தோம். இதில் இதுவரை அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை, அணை தற்போது நல்ல நிலையில் உள்ளது.
