Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

MUDA case: `ஆளுநரின் உத்தரவில் தவறு இல்லை' – சித்தராமையா மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2024
in அரசியல் செய்திகள்
0
MUDA case: `ஆளுநரின் உத்தரவில் தவறு இல்லை' – சித்தராமையா மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூர் நகர மேம்பாட்டு ஆணையம் (MUDA) இழப்பீடு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், முதல்வர் மீது விசாரணை நடத்துமாறும் முன்பு ஆளுநரிடம் சிலர் புகாரளித்தனர். அந்தப் புகாரை ஏற்ற ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்கு தொடுத்து விசாரிக்க கடந்த மாதம் அனுமதித்தார்.

சித்தராமையா

இதனால், ஆளுநரின் உத்தரவுக்கு எதிராகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா, பிரிவு 163-ன் படி அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு சட்டப்படி ஆளுநர் முடிவெடுக்கவில்லை. அவரின் உத்தரவை ரத்து செய்யுங்கள்’ என்று கோரி மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஆளுநருக்கெதிரான சித்தராமையாவின் மனுவை ரத்து உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்திருக்கிறது.

சித்தராமையாவின் மனுவை இன்று விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான தனி நீதிபதி அமர்வு, “சாதாரண சூழ்நிலையில் அரசியலமைப்பின் 163-வது பிரிவின்படி அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். இருப்பினும், சில விதிவிலக்கான சூழ்நிலைகளின்போது ஆளுநர் தாமாக முடிவெடுக்கலாம். இந்த வழக்கும் அத்தகைய விதிவிலக்கான சூழல்தான். இதில், ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுத்ததில் எந்த தவறும் இல்லை. மனுவில் கூறப்பட்டுள்ள உண்மைகள்மீது சந்தேகத்திற்கிடமின்றி விசாரணை தேவைப்படும்” என்று கூறி சித்தராமையா மனுவைத் தள்ளுபடி செய்தது.

கர்நாடக உயர் நீதிமன்றம்

அதைத்தொடர்ந்து, சித்தராமையா தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்ய, இரண்டு வாரங்களுக்கு இந்த உத்தரவின்மீது தடைவிதிக்குமாறு சித்தராமையா சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், தன்னுடைய உத்தரவு தானே நிறுத்த முடியாது என நீதிபதி எம்.நாகபிரசன்னா உறுதியாகக் கூறிவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Oscars: `விசாரணை டு லாபத்தா லேடீஸ்’ – 2015 முதல் ஆஸ்கருக்கு சென்ற இந்தியப் படங்களும், ஒன்லைன்களும்!



.

Previous Post

ஆறுபடை வீடு தவிர்த்து முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த கோயில்கள் – இவற்றில் உங்களுக்கு பிடித்தது எது? | Most famous and powerful Murugan temples in Tamil Nadu apart from Arupadai veedu

Next Post

Top 10 National-World News: பிரதமர் மோடி-உக்ரைன் அதிபர் சந்திப்பு, இஸ்ரேலுக்கு சீனா கண்டனம்.. மேலும் செய்திகள்-today 24 september 2024 top 10 national world news pm modi ukrain president meets

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Top 10 National-World News: பிரதமர் மோடி-உக்ரைன் அதிபர் சந்திப்பு, இஸ்ரேலுக்கு சீனா கண்டனம்.. மேலும் செய்திகள்-today 24 september 2024 top 10 national world news pm modi ukrain president meets

Top 10 National-World News: பிரதமர் மோடி-உக்ரைன் அதிபர் சந்திப்பு, இஸ்ரேலுக்கு சீனா கண்டனம்.. மேலும் செய்திகள்-today 24 september 2024 top 10 national world news pm modi ukrain president meets

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In