Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

2 வழக்குகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது … இறுக்கும் வழக்கு – கைக்கொடுக்குமா அதிமுக தலைமை?!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 18, 2024
in அரசியல் செய்திகள்
1
2 வழக்குகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது … இறுக்கும் வழக்கு – கைக்கொடுக்குமா அதிமுக தலைமை?!
20
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“நில மோசடி வழக்கு விசாரணை தீவிரமடைந்தபோதே தலைமையின் உதவியை நாடினார் விஜயபாஸ்கர்” எனப் பேசத் தொடங்கினார் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான சீனியர் நிர்வாகி ஒருவர். “அப்போதும் அவர் தலைமறைவாகவே இருந்தார். அப்போது தலைமையின் உதவியை நாட, அவர்களோ, ‘இந்த வழக்கில் ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், தங்களால் எதுவும் செய்ய முடியாது. இதில் தலையிட்டால், மொத்த கட்சிக்கே கெட்ட பெயர் ஆகிவிடும்’ என்று கைவிரித்துவிட்டது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்த விஜயபாஸ்கருக்கு அவரின் பக்கத்து மாவட்ட மாஜி ஒருவர் அடைக்கலம் கொடுக்க, முன்னாள் மணி மாஜி ஒருவர் ஆளுந்தரப்பின் மேலிடத்தில் மீண்டும் உதவி கேட்டிருக்கிறார். ஆனால், அங்கிருந்து சரியான பதில் வரவில்லையென்பதால் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார். இந்தச் சூழலில்தான் அவர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதின்போது போராட்டம் நடத்தியது, கண்டன அறிக்கை வெளியிட்டது எனத் தீவிரம் காட்டிய கட்சித் தலைமை, தன்னைக் கைது செய்தபோது பத்திரிகையாளர் சந்திப்பில் பெயரளவுக்கு கண்டனத்தை மட்டும் பதிவு செய்திருப்பது விஜயபாஸ்கர் தரப்பை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.” என்றவர்கள்.

எடப்பாடி பழனிசாமிஎடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த விவகாரத்தில் தலைமை எந்த உதவியும் செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே, சட்டரீதியாக இதை எதிர்கொள்ளவே திட்டமிட்டிருக்கிறோம். எனவே, அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறோம்” என முடித்துக்கொண்டனர்.

வழக்கு, வலுவான ஆதாரங்களோடு நகர்வதாலேயே, நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மீண்டும் மீண்டும் மறுத்தது. இந்த நிலையில் அதிமுக தலைமை தலையிட்டால், கட்சிக்கு தான் கெட்டப்பெயர் என ஒதுங்கியே நிற்கிறதாம் தலைமை.!

.

Previous Post

முழு லிஸ்ட் ரெடி.. ஆட்டத்தை கலைத்து ஆடுகிறார் ஸ்டாலின்.. நாளை மொத்தமாக புதிய அமைச்சரவை பதவி ஏற்பு?

Next Post

OPS: செல்லாது! செல்லாது! அவரு ஜெய்ச்சது செல்லாது! நவாஸ்கனி வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
OPS: செல்லாது! செல்லாது! அவரு ஜெய்ச்சது செல்லாது! நவாஸ்கனி வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு!

OPS: செல்லாது! செல்லாது! அவரு ஜெய்ச்சது செல்லாது! நவாஸ்கனி வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    லஞ்சமும் ஊழலும் மிகவும் மோசமான செயல். இதனால் நாட்டின் பொருளாதரமே முழுவதும் பாதிக்கப்படும். எனவே இது போன்ற வழக்குகளில் நீதிமன்றம் கருணை காட்டக் கூடாது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In