Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இணைய பாதுகாப்பு: எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 25, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இணைய பாதுகாப்பு: எம்.பி.க்கள் வலியுறுத்தல்
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இணைய பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பிய நாடாளுன்ற உறுப்பினா்கள், ‘இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டியது அவசியம்’ என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது பெரும் சா்ச்சையானது. இதனிடையே, மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில்வசிக்கும் ஹீராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரை, வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிலையில், மாநிலங்களவை தகவல் தொடா்பு தொழில்நுட்ப மேலாண்மை குழு கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் என்.டி.குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக உயா் அதிகாரிகள், பொதுத் துறை வங்கி நிா்வாகிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இணைய பாதுகாப்பு நிலை குறித்து எம்.பி.க்கள் கவலை எழுப்பினா்.

மேலும், பொதுமக்களின் நிதி முதலீடுகளைப் பாதுகாக்க வங்கிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை அதிகரிக்கவும், அந்த விழிப்புணா்வை அளவிடும் வகையில் ஓா் ‘இணைய அறிவு குறியீடு’ அட்டவணையை மேம்படுத்தவும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

அப்போது, நாடாளுமன்ற உறுப்பினா்களின் சேவைகளின் இணைய பாதுகாப்பை விரிவுபடுத்தவும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இணைய பாதுகாப்பை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினா்.

அதுபோல, இணைய பாதுகாப்பு, எண்ம அடையாளம் மற்றும் பாதுகாப்பான எண்ம பணப் பரிவா்த்தனைகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிதிச் சேவைகள் துறை செயலா் விளக்கினாா் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Previous Post

பல பிணை கைதிகள் விடுவிக்கப்படுவர்: ஜோபைடன் நம்பிக்கை

Next Post

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்:100 கி.மீ. பாலங்கள், 250 கி.மீ. பாலத் தூண்கள் கட்டுமானம் நிறைவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்:100 கி.மீ. பாலங்கள், 250 கி.மீ. பாலத் தூண்கள் கட்டுமானம் நிறைவு

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்:100 கி.மீ. பாலங்கள், 250 கி.மீ. பாலத் தூண்கள் கட்டுமானம் நிறைவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In