Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

5 ஆண்டுகளுக்கு பின்பு வாஸ்து பூஜையை ரகசியமாக நடத்துவதன் காரணம் என்ன? MP வெங்கடேசன் கேள்வி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 5, 2024
in Default
0
5 ஆண்டுகளுக்கு பின்பு வாஸ்து பூஜையை  ரகசியமாக நடத்துவதன் காரணம் என்ன? MP வெங்கடேசன் கேள்வி
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்பு முதற்கட்ட வாஸ்து பூஜை நடத்தப்பட்டுள்ள நிலையில், ரகசிய திட்டம் போல் கட்டுமானத்தை துவங்கியது ஏன் என .சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2019 ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார். 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2023-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் துவங்காமல் இருந்து வந்தது.

அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பின் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு பூமிபூஜை

அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பின் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு பூமிபூஜை

870 படுக்கை வசதியுடன் மருத்துவமனை, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பறை கட்டிடம், ஆய்வகக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. ரூ.1,624 கோடியில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான முழு நிதியும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜெய்கா நிறுவனத்தின் மூலம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டுமானப் பணிகளுக்கான நிதி தற்போது மத்திய அரசு நிதியுடன் சேர்த்து ரூ.1,977.80 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பின் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு பூமிபூஜை

அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பின் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு பூமிபூஜை

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 6 கிலோ மீட்டருக்கு சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர், தனியார் கட்டுமான எல்&டி நிறுவனம் எடுத்துள்ளது.

இதையடுத்து முதற்கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன் செய்யும் வாஸ்து பூஜை இன்று தொடங்கியது. ஓரிரு வாரங்களில் கட்டுமானப் பணிக்கான பூஜை தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் உட்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (கோப்பு படம்)

மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் உட்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (கோப்பு படம்)

இதனிடையே சுமார் 5 ஆண்டுகளாக துவங்கப்படாத கட்டுமான பணிகளை ரகசிய திட்டம் போல் தற்போது துவங்குவது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கியிருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Previous Post

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் முதல் இந்தியர் உயிரிழப்பு; ஏவுகணைத் தாக்குதலில் கேரள தொழிலாளி பலி

Next Post

“ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும் ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம்” : தலைமைபதி பிரஜாபதி கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும் ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம்” : தலைமைபதி பிரஜாபதி கண்டனம்

"ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும் ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம்" : தலைமைபதி பிரஜாபதி கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In