Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

என்னை தெரியுமா? என் பெயர் தெரியுமா.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் உரையாடல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 26, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் மாணவர்களுக்கு உவு பரிமாறி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது சர்க்கரை பொங்கல், காய்கறிகளுடன் கூடிய கிச்சடி உணவு பரிமாறப்பட்டது. இந்த திட்ட விரிவாக்கத்தால் 31,000 அரசு பள்ளிகளில் படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.

முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழ் நாட்டின் முதல்வர்களாக இருந்த இந்த மதிய உணவு திட்டம் தரம் படிப்படியாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பின்னர் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதில், காலை உணவாக உப்புமா, கிச்சடி உள்ளிட்ட பல்வேறு வகை சிற்றுண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சரின் இந்த காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் துவக்கி வைத்த முதல்வர் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்டார்.

.

Tags: foodMorningschemeஉணவஉரயடலஎனஎனனகலதடஙகதடடதரயமபயரமதலவரவததவரவககதத
Previous Post

நடிகர் திலகம் சிவாஜியை கோபப்படுத்திய கண்ணதாசன் பாட்டு!.. நடந்தது இதுதான்!..

Next Post

தாம்பத்ய வாழ்க்கையை குலைக்கும் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தாம்பத்ய வாழ்க்கையை குலைக்கும் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

தாம்பத்ய வாழ்க்கையை குலைக்கும் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In