ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஆக்ராவில் உள்ள யூனிகார்ன் நிறுவனங்கள் மாநாட்டில் விருந்தினர்களை வரவேற்ற முதல்வர் யோகி, “இந்த நேரத்தில், மகா கும்பமேளா மக்களை ஈர்க்கும் ஒரு இடமாக இருப்பதால், இதை ஸ்டார்ட்அப் உலகின் யூனிகார்ன் மகா கும்பமேளா என்று நான் அழைக்க முடியும்” என்றார்.
மேலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இதுபோன்று மக்கள் ஒன்றுகூடுவது ஒரு “அரிய” நிகழ்வு என்று யோகி தெரிவித்தார்.
