Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

டானா புயல்: உயிர் பலியில்லாத வகையில் முன்னெச்சரிக்கை- மோகன் சரண் மாஜீ

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
டானா புயல்: உயிர் பலியில்லாத வகையில் முன்னெச்சரிக்கை- மோகன் சரண் மாஜீ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புவனேசுவரம்: டானா புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தபோது, சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், இந்த புயலால் ஒருவர் கூட பலியானதாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் பிதா்கனிகா தேசிய பூங்கா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் டானா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது.

புயல் கரையைக் கடக்கத் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாகவே 15 கி.மீ. வேகத்தில் காற்று வீசத் தொடங்கிய நிலையில் கரையைக் கடக்கத் தொடங்கியபோது 110.கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும் வேளையில் அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது.

டானா புயல் கரையைக் கடந்தபோது, ஒடிசா – மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு சில நாள்களுக்கு முன்பிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, ஒரு உயிரிழப்புக்கூட நேரிடாத வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், ஒடிசா முதல்வர் பேசுகையில், ஒரு உயிரிழப்புக் கூட நேரிடக் கூடாது என்று வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதுபோல, சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அறுந்துவிழந்திருப்பதும் கூட வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் அகற்றப்படும் என்றும், ஏற்கனவே சீரமைப்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து முடிந்திருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை

டானா புயல் காரணமாக இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். தென்கிழக்கு ரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை ரயில்வே சாா்பில் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; புவனேசுவரம், கொல்கத்தா விமான நிலைங்களில் விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன.

முன்னெச்சரிக்கையாக, கேந்திரபாரா, பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 3.5 லட்சம் போ் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாக மாநில பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் சுரேஷ் பூஜாரி தெரிவித்திருந்தார்.

கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் 2.5 லட்சம் போ் வெளியேற்றம்!

டானா புயல் முன்னெச்சரிக்கையாக, மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். ஒடிசா மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.



.

Previous Post

மகாராஷ்டிரா தேர்தல்.. 2-வது பட்டியலை வெளியிட்ட அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி!

Next Post

பயணியால் தாக்கப்பட்ட கண்டக்டர் உயிரிழப்பு..வீடு திரும்பிய துரை முருகன்! 19 மாவட்டங்களில் மழை – இன்றைய டாப் செய்திகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live October 25, 2024: பயணியால் தாக்கப்பட்ட கண்டக்டர் உயிரிழப்பு..வீடு திரும்பிய துரை முருகன்! 19 மாவட்டங்களில் மழை

பயணியால் தாக்கப்பட்ட கண்டக்டர் உயிரிழப்பு..வீடு திரும்பிய துரை முருகன்! 19 மாவட்டங்களில் மழை - இன்றைய டாப் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In