Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“தேர்தலில் ஏமாற்று வேலை” செய்து வெற்றி பெற மோடி முயற்சி… 180 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது : ராகுல் காந்தி சவால்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 31, 2024
in Default
1
“தேர்தலில் ஏமாற்று வேலை” செய்து வெற்றி பெற மோடி முயற்சி… 180 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது : ராகுல் காந்தி சவால்!
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “மேட்ச் பிக்சிங் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நடுவரை அழுத்தத்திற்கு உட்படுத்தி, கிரிக்கெட் வீரரை விலைக்கு வாங்கி, கேப்டனை பயமுறுத்தி, போட்டியில் வெற்றி பெறுவதுதான் மேட்ச் பிக்சிங்.

இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி நடுவர்களைத் தேர்ந்தெடுத்தார். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். மோடியின் 400 தொகுதி வெற்றி கோஷம் என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யாமல் சாத்தியமில்லை

பாஜகவின் இந்த மேட்ச் பிக்சிங் நாட்டின் அரசியலமைப்பை அதன் மக்களின் கைகளில் இருந்து பறிப்பதற்காக செய்யப்படுகிறது. அரசியல் சாசனம் இல்லாமல், காவல்துறை, , வற்புறுத்தல்கள் மூலம் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்திய மக்களின் குரலை ஒடுக்கும் சக்தி உலகில் எவருக்கும் இல்லை.

மக்கள் முழு மனதுடன் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்றால், அவர்களின் மேட்ச் பிக்சிங் வெற்றி பெறும். பாஜக வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றினால் நாடு முழுவதும் தீப்பற்றி எரியும். இந்தத் தேர்தல் வாக்குகளுக்கானது அல்ல. இது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதாக நடக்கிறது.

மேட்ச் பிக்சிங், சமூக வலைதளங்கள், ஊடகங்களுக்கு அழுத்தம் தருவது இவையெல்லாம் இல்லையென்றால் பாஜகவால் 180 சீட் கூட வெல்ல முடியாது. இரண்டு முதல்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், எங்கள் வங்கி கணக்குகள் சீல் வைக்கப்பட்டன. இதை ஏன் ஆறு மாதங்களுக்குப் பிறகும் தேர்தலுக்கு முன்பும் அவர்கள் செய்யவில்லை” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

Previous Post

“மக்களின் வாக்குதான் பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுதும்” – டெல்லியில் முதல்வர் ஸ்டாலினின் உரை..

Next Post

மதில் சுவர் இடிந்த விபத்து… இனிமேல் இப்படி நடக்காது! புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் உறுதி !

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதில் சுவர் இடிந்த விபத்து… இனிமேல் இப்படி நடக்காது! புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் உறுதி !

மதில் சுவர் இடிந்த விபத்து... இனிமேல் இப்படி நடக்காது! புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் உறுதி !

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    முதலில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்று சொல்லுங்கள் பின்னர் மீதியை பார்க்கலாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In