மோடி – டிரம்ப் உரையாடல் குறித்து வெளியுறவுத் துறை செயலளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிபர் டிரம்பும் பிரதமர் மோடியும் இன்று சுமார் 35 நிமிடங்கள் பேசினர். உரையாடலின் போது, கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, “இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அல்லது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தம்” போன்ற பிரச்சினைகள் எந்த நேரத்திலும், எந்த மட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை என்பதை மோடி ட்ரம்பிடம் தெளிவுபடுத்தினார்.
