இதனைத்தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ரூ.550 கோடி மதிப்பிட்டில் தூக்குப் பாலத்துடன் புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
மேலும், ரூ.90 கோடி மதிப்பிட்டில் ராமேசுவரம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி தாம்பரம் – ராமேசுவரம் முதல் பயணிகள் ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்களி வைப்பதற்காக 12 புதிய பெட்டிகளைக் கொண்ட ரயில், புதி பாலம் வழியே ராமசுவரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கூறினார்.
இந்த ஆய்வின் போது, மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா,ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.ஈஸ்வர ராவ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
