நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
”சிலர் அரசியலமைப்பைக் காப்பதைப் போன்று நடிக்கின்றனர். ஆட்சியில் இருக்கும்போது அரசியலமைப்பை நசுக்கியவர்களும் அவர்கள்தான். தூய்மைப் பணியாளர்கள் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தூய்மைப் பணியாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை என்றால், அவர்களை சிறையில் அடைக்கும் சட்டம் இருந்தது. ஆனால், அத்தகைய சட்டங்களை அப்புறப்படுத்தியது நமது அரசு.
வளர்ச்சியடைந்த இந்தியாவின் தலைநகரில் இருப்பதை மக்கள் உணர்வதைப் போன்று தில்லியின் வளர்ச்சி இருக்க வேண்டும். நாட்டின் சிறந்த நகரமாக தில்லியை மாற்றுவேன் என்ற உறுதிமொழியை இங்கு உங்கள் முன்பு எடுத்துக்கொள்கிறேன்.
