Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார் – டிடிவி தினகரன் பேச்சு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 2, 2024
in Default
0
அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார் – டிடிவி தினகரன் பேச்சு!
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலனை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகை தந்தார். அவரை மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பூக்கள் தூவி ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு அளித்தனர். பேசத் தொடங்குவதற்காக இன்றைய டிடிவி தினகரன் இடம் வாலிபர் ஒருவர் தங்களது கையை கொடுக்க சொன்னார். கை எனக்கு வேண்டும். அதை எல்லாம் கொடுக்க முடியாது என அருகே நின்று கை கொடுக்க முயன்ற இளைஞரிடம் சிரித்தபடி கூறினார் டிடிவி தினகரன்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிற பெரும்பாலான கட்சி தலைவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போட்டியிடுகிறார்கள். அவர்கள் அனைவரையும் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். அம்மாவின் பெயரை சொல்லி பொதுமக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக கூட்டணியில் யார் போட்டிகிறார்கள் என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை. இந்த தேர்தலில் திமுக சார்பில் ஒரு குடும்பம் போட்டியிடுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் 2019 திரும்ப வரும் என்று நினைத்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் எடப்பாடி மீது இருந்த அதிருப்தில் பொதுமக்கள் வாக்களித்தார்கள். ஆனால் இந்த முறை அது நடக்காது. திமுக அரசு தகுதியுள்ள அனைவருக்கும் 1000 என்று கூறியது. ஆனால் அதன் பின்னர் நடந்தது வேறு. 

இந்த ஆயிரம் ரூபாய் வழங்குவதில் தமிழ்நாடு பெண்கள் திமுக மீது கோபமாக இருக்கிறார்கள். குட்டி ஸ்டாலின் உதயநிதி தனது தாத்தா, அப்பாவை தாண்டி விட்டார். விளையாட்டு அமைச்சர் என்று கிண்டலாக பேசினார். அம்மா மாதிரி இரும்பு மனிதர் மோடி அவர்கள். தற்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய பக்கம் திரும்பி பார்க்கவில்லை. அதற்கு காரணம் மோடி அவர்கள் தான். கொரோனா காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கியது. மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்தது இந்தியா. மற்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து தடுப்பூசி தயாரித்து வழங்கியது இந்தியா. விளையாட்டு முதல் விண்வெளி வரை இந்தியா முன்னேறி உள்ளது. இந்தியாவைக் கண்டு சீனா காரன் பயப்படுகிறார். மூன்றாவது முறையாக மீண்டும் மோடி வருவார்.

14 வருடங்களுக்கு முன்பு தேனியில் மக்கள் பணியாற்றினேன். தற்போது மீண்டும் 14 வருடம் கழித்து தேனி சென்றபோது கூட அந்த பகுதி மக்கள் என்னை மறக்கவில்லை. நான் செய்த பணிகளை மக்கள் எனக்கு நியாபப்படுத்தினார்கள். தேனி மக்களுக்கு TTV தினகரன் தான் வேண்டும் என்று கேட்கிறார்கள். அம்மா நம்மோடு இல்லை. அம்மா இடத்தில் தற்போது மோடி அவர்கள் இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு வேண்டிய திட்டங்களை நிச்சயம் பெற்று தருவார்கள். உண்மையான மக்களாட்சி உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் வாக்களியுங்கள் என்று பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

Previous Post

உத்தரவை மீறிவிட்டு மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்க முடியும்’..? உங்க மன்னிப்பை ஏற்க முடியாது.!! பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்.!!

Next Post

போட்டியின்றி தேர்வான 10 எம்எல்ஏக்கள்.. அருணாச்சல் தேர்தலில் அதிர்ச்சி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போட்டியின்றி தேர்வான 10 எம்எல்ஏக்கள்.. அருணாச்சல் தேர்தலில் அதிர்ச்சி..

போட்டியின்றி தேர்வான 10 எம்எல்ஏக்கள்.. அருணாச்சல் தேர்தலில் அதிர்ச்சி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In