ஸ்டார்க்கின் காயம் குறித்து ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “அவர் நலமுடன் இருக்கிறார். காயத்தில் இருந்து மீண்டுவிடுவார். நான் ஸ்டார்க்குடன் நீண்டகாலமாக விளையாடி வருகிறேன்.
உலகில் உள்ள விளையாடுவதற்கு மிகவும் கடினமான வீரர்களில் ஸ்டார்க்கும் ஒருவர். அவர் விலா எலும்பு காயத்தால் அவதியடைந்தாலும்கூட அவர் விளையாடத் தயாராக இருப்பார்” எனக் கூறினார்.
2014-2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பார்டர் – கவாஸ்கர் கோப்பை வெல்லுவதற்கு, ஆஸ்திரேலிய அணி 5-வது போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்ய வேண்டியது கட்டாயம். இருப்பினும், இந்திய அணி கடைசிப் போட்டியில் வெற்றிபெற்றால், 5-வது முறையாக கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ளும்.
